22 ஆகஸ்ட் 2008

குசேலன்: இப்படி ஆயிடுச்சே!

விநியோகஸ்தர்களின் போர்க்கொடியைத் தொடர்ந்து, திரையரங்க உரிமையாளர்களும் குசேலனுக்குக் எதிராக கொடி தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். தியேட்டரில் இருந்து எம்.ஜி. கொடுத்து (அதாவது முன்பணம்) திரையிடப்பட்ட குசேலன், அந்த எம்.ஜி யை நெருங்கக்கூட முடியாதபடி வசூல் செய்ய, பலத்த நஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறார்களாம் அவர்கள்.
காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரப் பொதுக்குழு சென்னையில் நடந்தது. இதில் போடப்பட்ட தீர்மானங்கள் சற்று அதிரடியாகவே இருக்கின்றன. தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினியே தலையிட்டு வாங்கித் தர வேண்டும். அப்படிப் பிரச்சனை சுமுகமாக முடியாவிட்டால் பிரச்சினை முடிகிறவரை கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிடும் படங்களை வாங்க மாட்டோ ம் என்று தீர்மானம்.
இப்படி அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்களுக்குச் சரி சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்ட பணத்தை மீண்டும் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குருநாதரின் கஷ்டத்தைச் சரி செய்யலாம் என்று நினைத்து ஒரு காரியம் செய்ய, அது இரட்டைத் தலைவலியில் முடிந்துவிட்டதே என்று வருந்துகிறாராம் ரஜினி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...