09 செப்டம்பர் 2008

ஒரு வயலின் ஓய்ந்துவிட்டது

இன்று காலையிலேயே அவர் இறந்த விடையம் எனக்கு இலங்கையில் உள்ள வானொலி ஒன்றின் மூலமாக தெரிந்தது.எனக்கு ஆரம்பத்தில் குன்னக்குடி வைத்தியாநாதன் அவர்களை பற்றி பெரிதாக எதுவும் தெரிந்து இருக்கவில்லை. பின் சண் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தவுடன் சில நிகழ்சிகளில் அவரை பார்த்தும் அவருடைய வயலின் இசையை கேட்டு ரசித்தும் இருக்கிறேன். இவ்வாறு ரசித்தவனுக்கு அவருடைய கச்சேரியை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தின் போது கிடைத்தது. அங்கு சென்ற போது இவருடைய கச்சேரியை பார்ப்பதற்கு கூட்டம் அலை மோதியது. ஒரு வழியாக அந்த கூட்டத்துக்குள் புகுந்து கச்சேரியை பார்த்தது மறக்க முடியாத சம்பவமாகத்தான் இன்றும் இருக்கிறது.
ஒரு வயலின் இன்று ஓய்ந்துவிட்டது.அந்த இசை மேதைக்கு இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

1 கருத்து:

நெல்லைதமிழ் சொன்னது…

தங்களின் இந்த படைப்பை நெல்லை தமிழில் மறுபிரசுரம் செய்துள்ளோம். நன்றி.

வலை முகவரி
http://nellaitamil.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...