14 செப்டம்பர் 2008

இலங்கை செஞ்சிலுவை சங்கம் தேசிய மட்டத்தில் பொலன்நறுவையில் நடாத்திய விளையாட்டுப்போட்டியில் யாழ் வீரர்கள் இருவர் தேசிய மட்டச் சாதனைகளை நிலை நாட்டினர்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த இருவர் தேசிய மட்டச் சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர்.23 வயதிற்கு உட்பட்ட நீளம் பாய்தலில் அ.அன்ரன் றஜீம்ராஜ் 7.4மீற்றர் தூரம் நீளம் பாயந்து முன்னைய சாதனையான 7.2மீற்றர் என்ற சாதனையை முறியடித்தார். இவர் யாழ்/இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.அத்துடன் இவர் பாடசாலை,பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகளிலும் பல திறமைகளை வெளிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.இதே வேளை 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் செல்வி.ரஜீத்தா 1.56மீற்றர் உயரம் பாயந்து முன்னைய சாதனையான 1.38 மீற்றர் என்ற சாதனையை முறியடித்தார்.இவர் யாழ்/சுண்டிக்குழி பெண்கள் பாடசாலையில் 2009 உயர்தரப் பிரிவில் கல்விக்ற்றுக் கொண்டு இருக்கின்றார்.இவ்விளையாட்டு போட்டிகளில் யாழ் மாவட்டதத்தை சேர்ந்த 50 க்கு மேற்பட்டோரும், இலங்கை முழுவதுமிருந்து சுமார் 1000க்கு மேற்பட்டோரும் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.மேற்படி மாணவர்கள் அடுத்த மாதம் ஹொங்கொங்கில் நடைபெற இருக்கும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேற்படி மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ளுகின்றேன்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...