14 பிப்ரவரி 2009

காதல்

உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்…!

உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது…!

உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது…!

உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை…!

உன் கன்னக் குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்…!

உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்…!

உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்…!

இன்று காதலர் தினத்தை கொண்டாடும்
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
http://flashman.blogspot.com/2007/10/blog-post.html

2 கருத்துகள்:

Sinthu சொன்னது…

கொண்டாடாதவங்களுகும் கொஞ்சம் வாழ்த்துச் சொல்லுங்க..........

வதீஸ்வருணன் சொன்னது…

கொண்டாடாதவர்களுக்கும் சொல்லலாமே

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...