31 டிசம்பர் 2010

விடைபெறும் 2010ம் எதிர்பார்ப்புக்களுடன் 2011ம்


2010ம் ஆண்டின் இறுதி மணித்துளிகளில் இந்த பதிவினை எழுதுகிறேன். இதுவே இந்த ஆண்டின் என் இறுதிப் பதிவாகவும் இருக்கப்போகின்றது.
2010ம் ஆண்டு பலருக்கு நன்மையான ஆண்டாகவும் இன்னும் பலருக்கு கசப்பானதாகவும் இருந்திருக்கும் எல்லாம் நன்மைக்காகவே என்று எடுத்துக்கொண்ள்ளுங்கள் நண்பர்களே...

பதிவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நல்லதொரு ஆண்டாக அமைந்திருக்கின்றது. அதாவது 2010ம் ஆண்டின் இறுதிப்பகுதி மிகமகிழ்ச்சியானதாக அமைந்திருக்கும் எனக்கும் அப்படித்தான். பதிவர்கள் சந்திப்பின் மூலம் பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். தொய்ந்திருந்த இலங்கை வலையுலகத்தினை வேகம் எடுக்கவைத்திருக்கின்றது இந்த இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு. இந்த வேகம் உற்சாகம் 2011ம் ஆண்டிலும் தொடரவேண்டும் என்பதே எனது அவாவாக இருக்கின்றது. அத்துடன் பதிவர்களுக்கு இடையில் மேலும் புரிந்துணர்வுகள் 2011ம் ஆண்டில் வளரவேண்டும்.

இன்னுமொன்றையும் சொல்லவேண்டும் அதாவது இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கோ மிகுந்த சோதனைகள் மிகுந்த ஆண்டாக 2010 ஆகிவிட்டது குறிப்பாக 2010 ன் இறுதி பகுதியை சொல்லலாம் கடும் மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளஅபாயமும் அவர்களுடைய மனங்களை அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையினை மேலும் வடக்கு கிழக்கில் மோசமாக பாதித்துவிட்டது என்று கூறலாம் 2011ம் ஆண்டிலாவது அம்மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்பதுதான் என்னுடையதும் இன்னும் பலருடையதுமான எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

முடிவு என்பது இன்னொன்றின் ஆரம்பமே அந்தவகையில் 2010ம் ஆண்டு விடைபெறுவதென்பது 2011ம் ஆண்டின் ஆரம்பத்துக்காகவே. அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு 2011ம் ஆண்டு எல்லோருக்கும் சிறந்த ஒரு ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு 2011 ம் ஆண்டு சந்திப்போமா நண்பர்களே!

29 டிசம்பர் 2010

காவலன் படத்தினை வெற்றிபெறச்செய்வோம்

தலைப்பை பார்த்தவுடன் விஜய் இரசிகர்கள் மிகுந்த சந்தோசமடைவார்கள் என்று நினைக்கின்றேன் சந்தோசப்பட்டால் மட்டும் போதாது சூட்டோடு சூடாக (எவன்டா அவன் அங்க சூடா என்ன வேணும் என்று கேட்கிறது?) எனக்குரிய சன்மானத்தினை வழங்கவேண்டும் என்று விஜயினுடைய இரசிகர்களைஅன்புடன் கேட்டுக்கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

அண்மைக்காலமாக விஜய் நடித்த படங்கள் எல்லாம் பலத்த சாதனைகளை தோல்வியில் நிலைநாட்டிக்கொண்டிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் தொடர் தோல்விகள் தயாரிப்பாளர்களுக்கு தொடர் நட்டங்கள் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளை விஜய் தனது படங்களின்மூலம் சந்தித்தும் விஜய் திருந்துவதாக இல்லைப்போல்லாதான் தெரிகின்றது.  இந்தா வருகிறது அந்தா வருகிறது பொங்கலுக்கு வருகிறது என்று தியட்டர் இல்லாமல் காவலன் படத்தினுடைய வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. இந்த லட்சணத்தில மன்மதன் அம்பு படம் தோற்கவேணும் அப்போதுதான் காவலன் படம் வெளியிடுவதற்கு தியட்டர் கிடைக்கும் என்று கேனைத்தனமாக புலம்பிக்கொண்டு இருக்கும் விஜய் இரசிகர்களும் இருக்கிறார்கள் என்று இந்த நேரத்தில் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. 

நான் உண்மையிலேயே விஜயினுடைய எதிர்பாளன்தான் ஆனால்பாருங்கோ எனக்கே விஜயினுடைய தோல்விப்படங்களை பார்த்து போரடிச்சுப்போச்சு பின்ன மொக்கை படங்களை தொடர்ந்து தந்தால் தோல்விக்குமேல் தோல்வி வராமல் வெற்றியா வரும் என்று விஜய் எதிர்ப்பாளர்கள் கேட்கிறது தெரிகின்றது (இப்போதெல்லாம் விஜய் இரசிகர்களே விஜயை திட்டுகிறஅளவுக்கு நிலமை ஆகியிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது) அதோட இன்னும் எவ்வளவு நாள்தான் நாங்களும் மொக்கை படங்களையே பார்க்கிறது அதனான இனி வரும் படங்களின் கதைகளையாவது சரியாக தெரிவு செய்யவேண்டும் இதுதான் எனது கோரிக்கை. அதனால மொக்கை படமாக இருந்தாலும் காவலன் படமாவது வெற்றிபெறவேண்டும் என்று என்னுடைய உள்மனம் சொல்லுது ஆகவே மொக்கை படமாக இருந்தாலும் பரவாயில்லை சினிமா இரசிகர்களே காவலன் படத்தை பத்து பதினைந்து தடவையாவது தியட்டருக்கு சென்று பார்த்து படத்தினை வெற்றிபெறச்செய்யவேண்டும் என்று தாழ்மையாக வேட்டுக்கொள்ளுகிறேன். விஜய் காவலனுக்கு பிறகாவது நல்ல கதைகளை தெரிவு செய்து நடிகவேணும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பம்கூட.

அப்புறம் விஜய் அவருடைய அப்பாவோட சேர்ந்து பல சொங்கித்தனமாக செய்யக்கூடாத விடயங்களை செய்வதற்கு தயாராகிறமாதிரி கதையெல்லாம் அடிபடுகிறது அதுதான் அவருடைய அரசியல் மேட்டர். அதற்காக விஜயை அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்லி நான் அவருடைய ஜனநாயக உரிமையை தடுக்க விரும்பவில்லை. அரசியலுக்கு வாங்கோ வந்து மக்களுக்கு நல்லதை செய்யுங்கோ ஆனால் சரியான நேரத்தில அரசியலுக்கு வாங்கோ என்றுதான் நான் கூறுகிறேன்.
விஜய்க்கும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்குது என்று நான் நம்புறன் அதைவைச்சு அவர் நல்ல நேரத்தில நல்ல முடிவொன்றை எடுப்பார் என்று நான் நம்புறன்.

கடைசியிலையும் சொல்லுறன் மொக்கைபடமாக இருந்தாலும் எப்படியாவது காவலன் படத்தினை வெற்றிபெறச் செஞ்சிடுங்கோ இது இந்த விஜய் எதிர்பாளனின் தாழ்மையான வேண்டுகோள் அம்புட்டுத்தான் விசியம்...

27 டிசம்பர் 2010

சூடா என்ன இருக்கு என்று கேட்டது தப்பா? - அம்பு


தலைப்பை பார்த்தவுடனே பல அன்பு உள்ளங்களுக்கு(எப்புடியெல்லாம் ஐஸ் வைக்கவேண்டியிருக்கு) என்ன சொல்லவாறன் என்பது விளங்கியிருக்கும். பதிவே போடுறதில்லை என்று ஒரு குறிக்கோளேட இருந்தவனை கடைசியில விளக்கப்பதிவு எழுத வைச்சிட்டிங்களே.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அப்புடி நான் என்னத்தைய்யா கேட்டுட்டன்? சூடா என்ன இருக்கு" என்றுதானே கேட்டன் அந்த கடையில் வேலைசெய்த அந்த நண்பர் கொஞ்சம் நகைச்சுவையுணர்வு மிக்கவராக இருந்துவிடார் அவ்வளவுதான். அதைப்போய் உலக அளவில பேமஸ் ஆக்கிட்டிங்களேய்யா... இப்புடி என்னை புலம்ப வைச்சிட்டிங்களே. என்னுடன் அன்று கடைக்கு வந்த அந்த இரு நண்பர்களுக்கும் ஏதாவது செய்யணும்போல இருக்கு. உங்களுடைய கடமையுணர்வு புல்லரிக்க வைக்குதைய்யா...

------------------------
அண்மையில் மன்மதன் அம்பு திரைப்படம் பார்த்தேன் சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய சவாலான விடயமான சந்தேகத்தினை கையில் எடுத்திருக்கின்றார் கமல்.

படத்தின் கதை - நான் சொல்லப்போறதில்லை போய் தியட்டுரில பாருங்கோ


நடிப்பு -
கமல் - ம்..ம்... நடிப்பு என்றாலே கமல் என்று ஒரு வரலாறே இருக்கு. கமலினுடைய நடிப்பைபற்றி நான்சொல்லித்தான் தெரியோணுமாக்கும்

மாதவன் - பட்டையை கிளப்பியிருக்கிறாரு மாதவன்

த்ரிஷா - பொண்ணு சும்மா அந்தமாதிரி நடிச்சிருக்கு. பின்ன கமல்படத்தில நடிக்க வந்துட்டு குருவி திருப்பாச்சி இதுபோன்ற படத்தில நடிச்சமாதிரி
நடிக்கமுடியுமே

சங்கீதா - அம்மணி கலக்கியிருக்கிறா அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் பின்னிட்டீங்க போங்க

ஏனையவர்களும் நன்றாக நடித்திருக்கின்றார்கள் குறிப்பாக ரமேஷ் அர்விந், சங்கீதாவின் மகனாகவரும் அந்த சுட்டி பையன், குஞ்சு குறூப்

இசை - நீலவானம் பாடல் மற்றும் பின்ணணி இசையில் கலக்கியிருக்கின்றார் தேவி ஶ்ரீ பிரசாத் என்பதைவிட கமல் DSPயை நன்றாக வேலைவாங்கியிருக்கின்றார் என்று சொல்லவேண்டும்

ஒளிப்பதிவு - இந்த படத்தில் ஒளிப்பதிவினைப்பற்றி சொல்லவேண்டும் அற்புதமாக படமாக்கியிருக்கின்றார் புதியவரான மனுஷ நந்தன். இவருடைய முதல்படத்திலேயே கலக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

படத்தொகுப்பு - நீலவானம் பாடல் தொகுப்பு செய்யப்பட்ட விதம் அருமை. அத்துடன் படத்தொகுப்பும் அருமையாக இருக்கின்றது. ஷான் முஹம்தம் என்ற புதியவர்தான் படத்தொகுப்பு. முதல்படத்திலேயே நன்றாக வேலைசெய்திக்கின்றார்

இயக்கம் - கே.எஸ். இரவிக்குமார்   தனது பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கின்றார் ஆனாலும் படத்தின் பெரும்பாலான பகுதியில் கமலே
தனித்துவமாக தெரிகின்றார்
மொத்தத்தில் ஒரு கமலுடைய இரசிகனாக எனக்கு படம் திருப்தி அம்புட்டுத்தானுங்கோ...

இதை விமர்சனம் எண்டு நீங்க நினைச்சால்அதுக்கு கம்பனி பொறுப்பாகாது

எனக்கு பிடித்த கமலின் 10 படங்கள் (விளக்கங்களை பின்பு ஒரு பதிவில் விளக்கமாக தருகிறேன்)


1. 16 வயதினிலே
2.சலங்கைஒலி
3.குணா
4.நாயகன்
5.மூன்றாம்பிறை
6.குருதிப்புனல்
7. இந்தியன்
8.விருமாண்டி
9.அன்பேசிவம்
10.தசாவதாரம்

18 டிசம்பர் 2010

இலங்கைப் பதிவர்களின் கிரிக்கட் நேரடி ஒளிபரப்பு

உலகின் முன்ணணி விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்பிவரும் ESPN, Star Sports, Ten Sports போன்றவற்றிற்கே சவால் விடும் நோக்கில் நாளை இடம்பெறவுள்ள தமிழ்ப் பதிவர்களின் கிரிகட் நேரடி ஒளிபரப்பினை சகபதிவர் கௌபோய் மது இலங்கையில் இருந்து உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளர் என்பதை சகலருக்கும் இத்தால் அறியத்தருகின்றேன்... இது தொடர்பாக பக்கோட தம்பி திருவாளர் கங்கோன் அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி கீழே உங்களுக்காக பிரதி செய்யப்பட்டு இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது


எதிர்வரும் 19ம் திகதி காலை 9.31 முதல் இலங்கையில் தமிழ்மொழிமூலமாகப் பதிவிடுகிற பதிவர்களின் சந்திப்பு ரொக்சி திரையரங்கிற்கு முன்னாலிருக்கிற தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளதை அறிந்திருப்பீர்கள்.
ஏற்பாட்டுக்குழுவினர் முழுமூச்சுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

சந்திப்பினை வழமைபோல ஹக்கர் கெளபோய்மது அவர்கள் நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளார் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
http://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் ஒளிபரப்பினை நீங்கள் காலை 9.31 (GMT: காலை 04.01) முதல் கண்டுகளிக்கலாம்.

அதைத்தவிர,
பதிவர்களிடையே அந்நியோன்னியத்தை வளர்க்கும் முகமாக, ஒருநாளை மகிழ்வுடன் களிக்கும் விதமாக நாளை காலை 9 மணிமுதல் இடம்பெறவுள்ள கிறிக்கற் போட்டியையும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்போவதாக ஹக்கர் கெளபோய்மது அறிவித்துள்ளார்.
மைதானம் என்பதால் தெளிவாக இருப்பது சிறிது கடினம் எனினும் தான் நேரடி ஒளிபரப்பு செய்வதில் குறியாக இருக்கிறார்.
அந்தப் போட்டியையும் நீங்கள் http://www.livestream.com/srilankantamilbloggers என்ற சுட்டியில் போட்டி தொடங்கியவுடன் பார்வையிடலாம்.

நன்றி.

சந்திப்போம் நண்பர்களே.

03 டிசம்பர் 2010

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 03


இரண்டாவது பதிவர் சந்திப்பு நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்றது. இந்த கால எல்லைக்குள் நம்மிடையே குட்டி சந்திப்புகள் அவ்வப்போது நடந்திருந்தாலும் அனைத்துப் பதிவர்களும் சந்திக்கும் பாரிய சந்திப்புகள் ஒன்றும் நடைபெறாதது கவலைக்குரியதே. இக்குறையை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் பொருட்டு பதிவர் சந்திப்பொன்றை நடாத்த முன்வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பதிவர்கள், புதிய பதிவர்கள், பதிவுலகத்தை உற்றுநோக்குபவர்கள்(வாசகர்கள்) ஆகிய அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு

இடம்: கைலாசபதி அரங்கு,
            தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
            காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
காலம்: 19ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.31 மணி

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 - கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 2 - தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.
  • இடைவேளையில் இன்னிசை.
  • கலந்துரையாடல் 3 - பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 4 - பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
  • பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.

  • நன்றியுரை.

இதுவரை குழுமத்திலேயோ அல்லது பேஸ்புக்கிலேயோ இயலுமானவரை விரைவாக உறுதிப்படுத்தவும். இம்முறை ஏற்பாட்டுக்குழுவினர் 
நிரூஜாவதீஸ்அனுதினன்வரோஅஷ்வின்பவன்.

பி.கு – வெளியிடங்களிலிருந்து வருவோர் தங்குமிட வசதிகள் தேவைப்படின் பதிவர் அஷ்வினை 13ம் திகதிக்கு முதல் தொடர்புகொண்டால் உரிய வசதிகளைச் செய்து தரமுடியும்.


இது பதிவர்களால் பதிவர்களுக்கு நடாத்தப்படும் சந்திப்பு எனவே சந்திப்புத் தொடர்பான தட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது, அவற்றை உங்கள் வலைப்பூக்களில் இட்டு சந்திப்புக்கு ஆதரவு வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
தட்டிகளைப்பெற இங்கே சொடுக்குங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...