31 டிசம்பர் 2010

விடைபெறும் 2010ம் எதிர்பார்ப்புக்களுடன் 2011ம்


2010ம் ஆண்டின் இறுதி மணித்துளிகளில் இந்த பதிவினை எழுதுகிறேன். இதுவே இந்த ஆண்டின் என் இறுதிப் பதிவாகவும் இருக்கப்போகின்றது.
2010ம் ஆண்டு பலருக்கு நன்மையான ஆண்டாகவும் இன்னும் பலருக்கு கசப்பானதாகவும் இருந்திருக்கும் எல்லாம் நன்மைக்காகவே என்று எடுத்துக்கொண்ள்ளுங்கள் நண்பர்களே...

பதிவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நல்லதொரு ஆண்டாக அமைந்திருக்கின்றது. அதாவது 2010ம் ஆண்டின் இறுதிப்பகுதி மிகமகிழ்ச்சியானதாக அமைந்திருக்கும் எனக்கும் அப்படித்தான். பதிவர்கள் சந்திப்பின் மூலம் பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். தொய்ந்திருந்த இலங்கை வலையுலகத்தினை வேகம் எடுக்கவைத்திருக்கின்றது இந்த இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு. இந்த வேகம் உற்சாகம் 2011ம் ஆண்டிலும் தொடரவேண்டும் என்பதே எனது அவாவாக இருக்கின்றது. அத்துடன் பதிவர்களுக்கு இடையில் மேலும் புரிந்துணர்வுகள் 2011ம் ஆண்டில் வளரவேண்டும்.

இன்னுமொன்றையும் சொல்லவேண்டும் அதாவது இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கோ மிகுந்த சோதனைகள் மிகுந்த ஆண்டாக 2010 ஆகிவிட்டது குறிப்பாக 2010 ன் இறுதி பகுதியை சொல்லலாம் கடும் மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளஅபாயமும் அவர்களுடைய மனங்களை அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையினை மேலும் வடக்கு கிழக்கில் மோசமாக பாதித்துவிட்டது என்று கூறலாம் 2011ம் ஆண்டிலாவது அம்மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்பதுதான் என்னுடையதும் இன்னும் பலருடையதுமான எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

முடிவு என்பது இன்னொன்றின் ஆரம்பமே அந்தவகையில் 2010ம் ஆண்டு விடைபெறுவதென்பது 2011ம் ஆண்டின் ஆரம்பத்துக்காகவே. அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு 2011ம் ஆண்டு எல்லோருக்கும் சிறந்த ஒரு ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு 2011 ம் ஆண்டு சந்திப்போமா நண்பர்களே!

14 கருத்துகள்:

றமேஸ்-Ramesh சொன்னது…

சந்திப்போமே.. எதையும் தாங்கும் இதயம் என்பதால் வருவதை எதிர்கொள்ளலாம்.

வதீஸ்-Vathees சொன்னது…

ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சுட்டானுகள்..புதுசு புதுசா கண்டுபிடிச்சுக்கொண்டே இருக்கிறானுகள்...
நன்றி ரமேஸ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

SShathiesh-சதீஷ். சொன்னது…

தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை:)

Anuthinan S சொன்னது…

வதீஸ் அண்ணா நம்பவே முடியல நீங்க தொடர்ந்து பதிவு போடுறத .....


வாழ்த்துக்கள் வதீஸ் அண்ணா!!!!

எது வந்தாலும் சேர்ந்து தாங்குவோம் :P

KANA VARO சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் brother...

வதீஸ்-Vathees சொன்னது…

பின்னூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிரூஜா சொன்னது…

இரவு ஒரு ஜீவன் இணையத்தில சுத்தேக்கையே நினைச்சன். பதிவு ஒன்று தயாராகின்றது என்று.

ஆமாம் வதீஸ். 2010! இழந்தவைகளும், கற்றவைகளும் பல. வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

////முடிவு என்பது இன்னொன்றின் ஆரம்பமே அந்தவகையில் 2010ம் ஆண்டு விடைபெறுவதென்பது 2011ம் ஆண்டின் ஆரம்பத்துக்காகவே. அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு 2011ம் ஆண்டு எல்லோருக்கும் சிறந்த ஒரு ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு 2011 ம் ஆண்டு சந்திப்போமா நண்பர்களே!////

அதே வாழத்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்

Bavan சொன்னது…

அட அட அட எதையும் தாங்கும் இதயம் வதீஸ் அண்ணே, இந்த ஆண்டு நமக்குகெல்லாம் என்ன வாங்கித்தரப்போறீங்க சூடா..:P

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அடுத்த ஆண்டு நீங்கள் நினைப்பது போல ஒரு சிறந்த இயக்குனராக வாழ்த்துக்கள்..:D

பி.கு - நீங்கள் என்னை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் ஹீரோவா நடிக்க சம்மதிக்கிறேன்..:P

வர்ட்டா..;)

ம.தி.சுதா சொன்னது…

தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்

sinmajan சொன்னது…

2011 ல் உங்கள் எதிர்பார்ப்புக்கள் யாவும் பூர்த்தியாக வாழ்த்துக்கள்..!!

Jana சொன்னது…

வாழ்த்துக்கள். புத்தாண்டு தங்களுக்கும் பல புத்தொளிகளை தரும் என நம்புகின்றேன்.

Subankan சொன்னது…

இனிய புதுவருட வாழ்த்துகள் :)

கானா பிரபா சொன்னது…

ஆங்கிலப்புதுவருச வாழ்த்துக்கள் நண்பா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...