27 டிசம்பர் 2010

சூடா என்ன இருக்கு என்று கேட்டது தப்பா? - அம்பு


தலைப்பை பார்த்தவுடனே பல அன்பு உள்ளங்களுக்கு(எப்புடியெல்லாம் ஐஸ் வைக்கவேண்டியிருக்கு) என்ன சொல்லவாறன் என்பது விளங்கியிருக்கும். பதிவே போடுறதில்லை என்று ஒரு குறிக்கோளேட இருந்தவனை கடைசியில விளக்கப்பதிவு எழுத வைச்சிட்டிங்களே.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அப்புடி நான் என்னத்தைய்யா கேட்டுட்டன்? சூடா என்ன இருக்கு" என்றுதானே கேட்டன் அந்த கடையில் வேலைசெய்த அந்த நண்பர் கொஞ்சம் நகைச்சுவையுணர்வு மிக்கவராக இருந்துவிடார் அவ்வளவுதான். அதைப்போய் உலக அளவில பேமஸ் ஆக்கிட்டிங்களேய்யா... இப்புடி என்னை புலம்ப வைச்சிட்டிங்களே. என்னுடன் அன்று கடைக்கு வந்த அந்த இரு நண்பர்களுக்கும் ஏதாவது செய்யணும்போல இருக்கு. உங்களுடைய கடமையுணர்வு புல்லரிக்க வைக்குதைய்யா...

------------------------
அண்மையில் மன்மதன் அம்பு திரைப்படம் பார்த்தேன் சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய சவாலான விடயமான சந்தேகத்தினை கையில் எடுத்திருக்கின்றார் கமல்.

படத்தின் கதை - நான் சொல்லப்போறதில்லை போய் தியட்டுரில பாருங்கோ


நடிப்பு -
கமல் - ம்..ம்... நடிப்பு என்றாலே கமல் என்று ஒரு வரலாறே இருக்கு. கமலினுடைய நடிப்பைபற்றி நான்சொல்லித்தான் தெரியோணுமாக்கும்

மாதவன் - பட்டையை கிளப்பியிருக்கிறாரு மாதவன்

த்ரிஷா - பொண்ணு சும்மா அந்தமாதிரி நடிச்சிருக்கு. பின்ன கமல்படத்தில நடிக்க வந்துட்டு குருவி திருப்பாச்சி இதுபோன்ற படத்தில நடிச்சமாதிரி
நடிக்கமுடியுமே

சங்கீதா - அம்மணி கலக்கியிருக்கிறா அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் பின்னிட்டீங்க போங்க

ஏனையவர்களும் நன்றாக நடித்திருக்கின்றார்கள் குறிப்பாக ரமேஷ் அர்விந், சங்கீதாவின் மகனாகவரும் அந்த சுட்டி பையன், குஞ்சு குறூப்

இசை - நீலவானம் பாடல் மற்றும் பின்ணணி இசையில் கலக்கியிருக்கின்றார் தேவி ஶ்ரீ பிரசாத் என்பதைவிட கமல் DSPயை நன்றாக வேலைவாங்கியிருக்கின்றார் என்று சொல்லவேண்டும்

ஒளிப்பதிவு - இந்த படத்தில் ஒளிப்பதிவினைப்பற்றி சொல்லவேண்டும் அற்புதமாக படமாக்கியிருக்கின்றார் புதியவரான மனுஷ நந்தன். இவருடைய முதல்படத்திலேயே கலக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

படத்தொகுப்பு - நீலவானம் பாடல் தொகுப்பு செய்யப்பட்ட விதம் அருமை. அத்துடன் படத்தொகுப்பும் அருமையாக இருக்கின்றது. ஷான் முஹம்தம் என்ற புதியவர்தான் படத்தொகுப்பு. முதல்படத்திலேயே நன்றாக வேலைசெய்திக்கின்றார்

இயக்கம் - கே.எஸ். இரவிக்குமார்   தனது பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கின்றார் ஆனாலும் படத்தின் பெரும்பாலான பகுதியில் கமலே
தனித்துவமாக தெரிகின்றார்
மொத்தத்தில் ஒரு கமலுடைய இரசிகனாக எனக்கு படம் திருப்தி அம்புட்டுத்தானுங்கோ...

இதை விமர்சனம் எண்டு நீங்க நினைச்சால்அதுக்கு கம்பனி பொறுப்பாகாது

எனக்கு பிடித்த கமலின் 10 படங்கள் (விளக்கங்களை பின்பு ஒரு பதிவில் விளக்கமாக தருகிறேன்)


1. 16 வயதினிலே
2.சலங்கைஒலி
3.குணா
4.நாயகன்
5.மூன்றாம்பிறை
6.குருதிப்புனல்
7. இந்தியன்
8.விருமாண்டி
9.அன்பேசிவம்
10.தசாவதாரம்

20 கருத்துகள்:

கன்கொன் || Kangon சொன்னது…

:D :D :D :D


// அன்று கடைக்கு வந்த அந்த இரு நண்பர்களுக்கும் ஏதாவது செய்யணும்போல இருக்கு. உங்களுடைய கடமையுணர்வு புல்லுரிக்க வைக்குதைய்யா... //

ஹி ஹி ஹி ஹி.... :D

மைந்தன் சிவா சொன்னது…

யார் அந்த ரெண்டு பயலுகளும்??ஒண்டு கோபியா இருக்குமோ??ச்சா சா

நிரூஜா சொன்னது…

// அன்று கடைக்கு வந்த அந்த இரு நண்பர்களுக்கும் ஏதாவது செய்யணும்போல இருக்கு. உங்களுடைய கடமையுணர்வு புல்லுரிக்க வைக்குதைய்யா...

நானில்லை

வதீஸ்-Vathees சொன்னது…

மைந்தன் என்னா ஒரு கெஸ்ஸிங்

LOSHAN சொன்னது…

இதென்ன சுயவிளக்கமா?
அப்ப நீங்க தானா அந்த 'வதீஸ்?' அட.. இதுவரைக்கும் அது நீங்க என்று நான் நினைக்கவே இல்லை ;)

மன்மதன் அம்பு - :) same feelings :)

வதீஸ்-Vathees சொன்னது…

ஃஃLOSHAN கூறியது...
இதென்ன சுயவிளக்கமா?
அப்ப நீங்க தானா அந்த 'வதீஸ்?' அட.. இதுவரைக்கும் அது நீங்க என்று நான் நினைக்கவே இல்லை ;)ஃஃ

அட அட அட என்னா ஒரு பெர்போமன்ஸ்

றமேஸ்-Ramesh சொன்னது…

வெற்றி எப் எம்மில் இண்டைக்கு காலையில சொன்ன வ__ ஸ் நீங்க தானா??
வில்லன் தூரத்துல இருக்கிறதில்ல கூட்டிக்கொண்டுதான் போவோம் எங்கிறது இதுதானா??

Jana சொன்னது…

ஆஹா...ஆஹா...ஆஹாஹா...வதீஸ்...சொல்லவே இல்லை????
மன் மதன் அம்பு...அது...

கார்த்தி சொன்னது…

// நீலவானம் பாடல் மற்றும் பின்ணணி இசையில் கலக்கியிருக்கின்றார் தேவி ஶ்ரீ பிரசாத் என்பதைவிட கமல் DSPயை நன்றாக வேலைவாங்கியிருக்கின்றார் என்று சொல்லவேண்டும்

அதுதான் உண்மை. இல்லாவிட்டால் DSPயாவது ஒழுங்கா Musicஆவது....

Cool Boy கிருத்திகன். சொன்னது…

நல்ல விமர்னம்..

Anuthinan S சொன்னது…

:))))

i can' belive this......!

KANA VARO சொன்னது…

சூடா என்ன இருக்கு என்று கேட்டது தப்பா?//

நாலு பேருக்கு நல்லது செய்யணும் எண்டா எதுவும் தப்பில்லை...

Bavan சொன்னது…

//அன்று கடைக்கு வந்த அந்த இரு நண்பர்களுக்கும் ஏதாவது செய்யணும்போல இருக்கு.//

என்னாதுதுது?
அப்ப அந்த வதீஸ்தான் இந்த வதீசா??

நாங்கெல்லாம் அது நீங்க இல்லை எண்டுதானே பேசாம இருந்தோம், நீங்க எண்டு தெரிஞ்சிருந்தா இன்னும் 4 பதிவு போட்டு மாட்டரை சும்மா புல்லட் வேகத்தில பரப்பியிருப்பமே..:P (சரி இன்னும் ஒண்டும் லேட் இல்லை)

மன்மதன் அம்பு - அதே அதே..:D

btw,
ஏன் 1st showக்கு வாறன் எண்டுட்டு நீங்க வரவேயில்ல? நாங்க எவ்வளவு நேரம் வெயிட் பண்ணினோம் தெரியுமா..:P

வதீஸ்-Vathees சொன்னது…

கொய்யாலபவன் நீகதைக்காதையடா..

Bavan சொன்னது…

அணு:ணே நீங்க முதலாம் நம்பர் ராசியில்ல எண்ட ரெண்டாவது showவுக்கு வந்த கதையையும் பதிவாப் போடவா..:P #படத்துடன்

வதீஸ்-Vathees சொன்னது…

டேய் டேய் சும்மா வதந்தியளை பரப்பாதை

Bavan சொன்னது…

வதந்தியல்ல என்னடட ஆதாரம் இருக்கு..:P

மக்கள்ஸ் படத்தோட பதிவு போட்டே ஆகவேணும் எண்டுற ஆக்கள் எல்லாரும் கையத்தூக்குங்க..:P

வதீஸ்-Vathees சொன்னது…

ஓகே பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் :P

ஜனகனின் எண்ண ஜனனங்கள் சொன்னது…

நல்லாயிருக்கு நல்லாயிருக்கு நல்லாயிருக்கு...எல்லாம் நல்லாயிருக்கு....


ஃஃஃமக்கள்ஸ் படத்தோட பதிவு போட்டே ஆகவேணும் எண்டுற ஆக்கள் எல்லாரும் கையத்தூக்குங்க..:Pஃஃஃஃ
இங்கே நான்...

வதீஸ்-Vathees சொன்னது…

கருத்துரையிட்ட கும்மியடிச்ச நண்பர்களுக்கு நன்றிகள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...