19 பிப்ரவரி 2011

உலககிண்ண கிரிக்கட் 2011

உலககிண்ண கிரிக்கட்போட்டி ஆரம்பமானப்போகின்றது எங்கு பார்த்தாலும் கதைத்தாலும் கிரிக்கட்தான். இந்தமுறை இந்தியா இலங்கை வங்கதேசம் ஆகிய மூன்று தென்னாசிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண கிரிக்கட்போட்டியை நடத்துவது சிறப்பு. எனக்கு கிரிக்கட் விளையாடுவதில் அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும் தொலைக்காட்சியில் கிரிக்கட் பார்ப்பவன். இலங்கை கிரிக்கட் அணியினுடைய இரசிகன். எனக்கு தெரிந்து பல பதிவுலக நண்பர்கள் நாளாந்தம் இதுதொடர்பாக விரிவாகவும் விலாவாரியாகவும் பதிவு எழுதிவருகின்றார்கள். 


இதுவரைகாலமும் ஒரு சர்வதேச போட்டியைகூட நேரடியாக ஆடுகளங்களில் பார்த்ததில்லை இப்பபோது முதன்முறையாக சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது அதுவும் என்னுடைய நண்பர்களுடன் சென்று பார்ப்பதற்கான சந்தர்ப்பம். இலங்கையில் உலகக்கிண்ணப்போட்டியொன்று நடைபெறும்போது அதை தவறவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன் இப்போது லோஷன் அண்ணா மற்றும் கோபியின் தயவில் கையில் ரிக்கட்டுகள் கிடைத்திருக்கின்றன அதுவும் இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி.
நல்ல ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.


இந்தமுறை உலககிண்ணத்தை இலங்கையே வெல்லவேண்டும் என்பது என்னுடை எதிர்பார்ப்பு. ஆனால் மற்றைய அணிகளையும் குறைத்து மதிப்பிடமுடியாது இலங்கை தவிர இந்தியாவுக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது அதைவிட நான் எதிர்பார்ப்பது பாக்கிஸ்தான் அணியினரை ஏனென்றால் அவர்கள் எப்போது வெல்வார்கள் எப்போது தோற்பார்கள் என்று கூறமுடியாதிருக்கின்றது அதனால் இந்தமுறை பாக்கிஸ்தானையும் கிண்ணத்தை கைப்பற்றும் அணியினுடைய பட்டியலுக்குள் நான் வைத்திருக்கின்றேன். இதற்கு மற்றுமொரு காரணம் பாக்கிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி.எந்த அணிகிண்ணத்தை சுவீகரித்தாலும் சந்தோஷம்தான் அதிலும் குறிப்பாக இலங்கை கிண்ணத்தை கைப்பற்றினால் இலங்கை அணியினுடைய இரசிகன் என்ற வகையில் மேலும் சந்தோஷப்படுவேன். பொறுத்திருந்து பார்ப்போம் எந்த அணி வெற்றி பெறுகின்றதென்று.... 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...