15 ஜூலை 2012

தலைப்பு...???


வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்ற ஒரு பழமொழி தமிழில் இருப்பது எல்லோரும் அறிந்த ஒரு விடயம். எனக்கு சிறு வயதுமுதலே வாசிப்பதில் ஈடுபாடு இருக்கின்றது அவற்றில் ஒன்றுதான் நாவல்கள் படிப்பது. நாவல்கள் படிப்பது எனக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு. எழுத்தாளர் சாண்டிலியன் அவர்களுடைய நாவல்களை விரும்பி படிப்பேன். நான் என்னுடைய வாழ்நாளில் முதன்முதலாக படித்த நாவல் சாண்டிலியனின் “கடற்புறா” இதுவே எனக்கு எழுத்தாளர் நாவலாசிரியர் சாண்டிலியனை அவருடைய படைப்புக்களை விரும்புவதற்கு முதற்காரணமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.


“பெரிய மனிதர்கள் எப்பேர்பட்ட பெரிய காரியத்தை சாதித்தாலும் அதைப்பற்றி பிரஸ்தாபிக்காமல் அடக்கமாகவே இருப்பார்கள்.  அவர்கள் சாதித்த காரியத்தைப்பற்றி யாராவது பேச முற்பட்டாலும் அந்தப் பேச்சில் கலந்துகொள்ள வெட்கப்படுவார்கள். ஏனென்றால் பெரிய காரியங்களை சாதிப்பது அவர்களுக்கு சர்வசாதாரணம். சின்ன மனிதர்களில் நிலமை வேறு. சாதாரண காரியங்களை சாதிப்பதே அவர்களுக்குப் பிரம்ம பிரயத்தனமாகையினால் தாங்கள் எதைச்செய்தாலும் அதை பிரமாதமாகவே நினைக்கின்றார்கள். இதனால் தலை கிறுக்கேறி அவர்களது மனேநிலை புரண்டுவிடுவதால் சந்தர்ப்பா சந்தர்ப்பமில்லாமல் தாங்கள் செய்த காரியங்களைப்பற்றிப் பெருமை அடித்து கேட்பவர்களு எரிச்சலை உண்டு பண்ணுவதோடு தங்களையும் பெரிய சங்கடத்தில் மாட்டிவைத்துக்கொள்கிறார்கள்.”


மலைவாசல் நாவலின் ஒரு அத்தியாயத்தை நாவலாசிரியர் சாண்டிலியன் மேலுள்ள இந்த பந்தியோடு ஆரம்பிக்கின்றார். எவ்வளவு அழகான ஒரு உண்மையை தனது நாவலின் ஒரு கதாபாத்திரத்தின் செயற்பாட்டை சொல்லவரும்முன் இந்த ஒரு பந்திமூலம் அழகாக கூறுகின்றார். இன்று வாசித்து முடித்த மலைவாசல் நாவலில் காணப்பட்ட எங்களுடைய வாழ்க்கைக்கு மிகமுக்கியமான இந்த நல்ல கருத்தினை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற காரணத்தினால் பதிவேற்றுகின்றேன்.LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...