24 ஜனவரி 2013

விஸ்வரூபமும் பொதுபலசேனாவும் & முஸ்லிம்களும்


ஒரு படத்தை தடை செய்வதையோ காட்சிகளை தணிக்கை என்ற ரீதியில் அகற்றுவதையோ சினிமாத்துறைக்குள் இருப்பவன் என்ற ரீதியல் மட்டுமல்லாது பொதுவான பார்வையாளனாகவும் கண்டிக்கின்றேன் வன்மையக எதிர்கின்றேன். ஒரு திரைப்படத்தை உருவாக்க ஒரு இயக்குனர் எவ்வளவு கஷ்டங்களைப்படவேண்டியிருக்கிறது ஆனாலும் சில மலினமான விடயங்களுக்காகவும் உப்புச்சப்பில்லாத காரணங்களையும் முன்நிறுத்தி அதனை முடக்க நினைப்பது முட்டாள்த்தனம்.

படம்பார்த்த ஒரு "குழு" படத்தை தடைசெய்ய கோருகிறார்கள் என்றவுடன் எந்தவித சிந்திப்புக்களும் இல்லாது படத்தை தடைசெய்யவேண்டும் எனக் கோருவது எம்முடைய இந்த உலகத்தில் இன்னமும் "சுயபுத்தியுடன்" செயற்படாது "சொல்புத்தியில்" இயங்கும் சிலரும் வாழ்கின்றார்கள் என்பதை நினைவுபடுத்த வைக்கின்றார்கள். உண்மையான முஸ்லிம்/உண்மையான கிறீஸ்வதன்/உண்மையான ஹிந்து ஒருபோதும் படைப்புக்களுடாக தான் சார்ந்த மதம்மீது தொடுக்கப்படும் விமர்சனங்களுக்காக அந்த படைப்பையே தடைசெய்ய  கோரமாட்டான்.

அந்தவகையில் நேற்று தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்ட கமல் ஹாசனுடைய விஸ்வரூபம் படம் இன்று இலங்கையிலும் மறு அறிவித்தல்வரை   தடை செய்திருப்பதானது நல்ல சினிமாவை சமூகத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை முடக்கும் நடவடிக்கைகளில் ஒன்று.

"இலங்கை அரசு படங்களை தடை செய்வதென்பது புது விடயமல்ல 2006ம் ஆண்டளவில் இலங்கையின் திரைப்பட நெறியாளர் அசோக ஹந்தகம இயக்குனரது “அக்ஷரய” என்ற ஒரு திரைப்படம் இலங்கையின் நீதித்துறைக்கு எதிராக எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி இலங்கை அரசங்கத்தினால் தடைசெய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது இயக்குனரை சிறையில் அடைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதே அரசாங்கம் அண்மையில் இலங்கையில் நீதித்துறையினை குற்றம்சாட்டியதோடு மட்டுமல்லாது நீசியரசரையும் பதவியிலிருந்து தூக்கிவீசியிருந்தது. இன்று அந்த “அக்ஷரய” திரைப்படம் வெளிவந்திருக்குமானால் அரசாங்கத்தால் அமோகமாக வரவேற்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை. அதை இன்றைய பத்திரிகை ஒன்றின் பேட்டியில் அன்று படத்தை தடைசெய்த அமைச்சரே அன்று தான் எடுத்த முடிவு பிழையானதொரு முடிவு என்று கருத்து தெரிவித்திருக்கின்றார்"

இந்த சம்பவத்தினை நான் ஏன் இங்கு குறிபிட்டேன் என்றால் படைப்புக்குள்ளும் தனக்கு சாதமானவற்றை தேடும் குறுகிய மனப்பாங்குடன் பல சமூகங்கள் மட்டுமல்லஅரசாங்களும் செயற்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது நாளை (25.01.2013) கொழும்பில் இந்த படத்துக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்களாம். குறைந்தது இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக "பொது பலசேனா" செய்யும் அட்டூழியங்களுக்காக போராடாமல் மௌனியாக இருந்துகொண்டு வெறும் அறிக்கைகளைவிடும் இவர்கள் "கமலின் படைப்புக்கு" எதிராகப் போராட வெளிக்கிடுவது முஸ்லிம்களையும் அவர்களது சமூகத்தையும் நோக்கி மேலும் கேள்விகள் விமர்சனங்கள் கேட்கப்படுவதை அதிகரிக்க செய்யுமே தவிர குறைக்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மை

4 கருத்துகள்:

DiaryAtoZ.com சொன்னது…

"படம்பார்த்த ஒரு "குழு" படத்தை தடைசெய்ய கோருகிறார்கள் என்றவுடன் எந்தவித சிந்திப்புக்களும் இல்லாது படத்தை தடைசெய்யவேண்டும் எனக் கோருவது எம்முடைய இந்த உலகத்தில் இன்னமும் "சுயபுத்தியுடன்" செயற்படாது "சொல்புத்தியில்" இயங்கும் சிலரும் வாழ்கின்றார்கள் என்பதை நினைவுபடுத்த வைக்கின்றார்கள். "

சமந்தபட்டவர்கள் சிந்திப்பார்களா?

பெயரில்லா சொன்னது…

மதத்தின் பெயரால் அட்டூழியம் புரியும் இவர்கள் இதைத்தான் செய்வார்கள். இததற்கு மேல் எதை எதிர்பார்ப்பது. இன்று புத்த குருமார்கள் பன்றியின் மேல் அல்லாவின் நாமத்தை எழுதி ஆர்ப்பாட்டம் புரிந்துள்ளார்கள். அதற்கு இவர்களின் பிரதிபலிப்பு என்ன? மதத்தையும் இனத்தையும் விற்று உண்ணும் இவர்களுக்கு ஒரு கலைஞனின் மனவுணர்வுகளை ஏற்றுக் கொள்வது கடினமே.

♔ம.தி.சுதா♔ சொன்னது…

அவர்களது கட்டுப்பாடற்ற சுய சுதந்திரத் தன்மை தலையிடி கொடுக்கும் போது தான் எல்லோரும் உணர்வார்கள்....

♔ம.தி.சுதா♔ சொன்னது…

ஒரு பாலைவனத்தில் நகரும் கதைக்கு சென்னைக் குப்பத்து நடிகர் கபாலியை கொண்டு போய் விட வேண்டுமென்பது தான் இவர்கள் வாதம் போல இருக்கிறது...
பச்சையாகச் சொல்வதானால் அறிவிலிகள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...