14 அக்டோபர் 2014

How Old Are You?


மேலே உள்ள தலைப்பு அண்மையில் மலையாள சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இரண்டு நாட்களுக்கு முன்னம் இந்தத் திரைப்படத்தினைப் பார்த்தேன். படம் பிடித்துப் போய்விட்டது. இன்றுதான் அதைப்பற்றி கிறுக்குவதற்று நேரம் கிடைத்தது. இது அந்தப் படத்தினைப் பற்றி விமர்சனம் அல்ல அந்தப் படம் தொடர்பாக நான் கிறுக்கியவை. 


தெற்காசியாவில் அதுவும் இலங்கை மற்றும் இந்தியாவில் பெரும்பாலும் ஆணாதிக்க சமூகங்க கட்டமைப்புக்களுடன்தான் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். பெண்கள் மனைவி என்ற ஸ்தானத்தை திருமணத்தின் மூலம் பெற்றுக்கொண்டு கணவனுக்கு சேவை புரிபவளாகளும் பிள்ளைகளை பெற்று பராமரிப்பவளாகவுமே பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கின்றாள். படித்து வேலையில் இருப்பவர்கள்கூட இந்த ஆணாதிக்க சமூகத்தின் இறுக்கமான கட்டமைப்புக்களுக்குள் சிக்குண்டு தங்களுடைய கனவுகளை குடும்பத்திற்காக மூட்டைகட்டி ஒரு மூலையில்போட்டுவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். விதிவலக்காக பல பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்து வெளியே வந்து பெண்களுக்கான உரிமைகளை குடும்பத்திலும் சமூகத்திலும் வென்றெடுக்க போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் சில பெண்கள்  ஏனைய பெண்களுக்கு கட்டமைப்பிலிருந்து வெளியே வருவதற்கு முன்மாதியாகவும் இருக்கின்றார்கள். இது ஒரு மிகப்பெரிய பரந்துபட்ட தலைப்பு. இந்தத் தலைப்பினை பிரதான கருப்பொருளாக எடுத்துக்கொண்டு பெண்களுக்கு சமூகக் கட்டமைப்புகளிலிருந்து வெளியே வருவதற்கான ஒரு ஆரம்ப்பப் புள்ளியை அல்லது ஒரு உந்துசக்தியை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் இந்த “How Old Are You?”. வருவாய் துறை அலுவலகத்தில் சாதாரண கிளாக்காக பணிபுரியும் நிருபமாவின் கணவன் ராஜீவ்ஆகாசவானிவானொலி அறிவிப்பாளன். அவனுடைய நீண்டகால கனவு  அயர்லாந்து நாட்டுக்கு சென்று குடியேற வேண்டும் என்பதே. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள். நிருபமா தனது கும்பமே தனக்கு எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவள். அவளுடைய வயதை காரணம்காட்டி அயர்லாந்து செல்வதற்கான விண்ணப்பம் நிராகரிககப்படுகின்றது. அதேவேளை எதிர்பாராத விதமாக நிருபமா தன்னுடைய மகள் ஊடாக கேட்ட ஒரு கேள்வி காரணமாக இந்தியாவின் ஜனாதிபதி நிருபமாவை சந்திக்க விருப்பப்படுகின்றார். ஜனாதிபதியினை சந்திக்கச்செல்லும் நிருபமா எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் அவருடன் பேசமுடியாமல் போய்விடுகின்றது. இதன் காரணணமாக அவர் சமூகவலைத்தளங்களில் கேலிக்கு உட்படுகின்றாள். இதேவேளை நிருபமாவின் கணவனுக்கும் மகளுக்கும் அயர்லாந்து செல்வதற்கான விசா கிடைக்கின்றது. இருவரும் நிருபமாவை விட்டுவிட்டு அயர்லாந்து பயணிக்கின்றனர். பின்னர் நிருபமாவினுடைய பள்ளித்தோழி ஒருவரை சந்திக்கும் நிருபமா அதன்மூலம் கல்லூரிக்காலங்களில் அவள் ஒரு சிறந்த ஆளுமையுள்ள ஒருத்தியாக இருந்ததையும் தற்போது திருமணம் முடித்து குடும்பத்துக்காகவே வாழும் ஒரு சாதாரண பெண்ணாக மாறிவிட்டதையும் காண்கின்றாள். மீண்டும் நிருபமாவினுடைய ஆளுமையை வெளியே கொண்டுவர அந்த நண்பி முயற்சிக்கின்றாள். அதிலே வெற்றியும் அடைகின்றாள். இதன் பின்னர் நிருபமா சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்புக்களை முன்னெடுக்கும் நிலைக்கு உயரும் நிலையினை அடியும்போது அயர்லாந்திலிருக்கும் கணவன் ஊர் திரும்பி அவளுக்கு அயர்லாந்து செல்ல விசா கிடைத்துவிட்தென்றும் மகளுக்கு சரியான உணவு இல்லை ஆகவே நிருபமா வந்தால்எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகின்றான். அவள் குடும்பத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு அயர்லாந்து போகின்றாளா அல்லது தொடர்ந்தும் இந்தியாவிலே இருந்து தன்னுடைய கனவுகளை நனவாக்கின்றாள் என்பதுதான் படத்தினுடைய சாராம்சம். 


கேரளாவில் மட்டுமல்ல பொதுவாக தெற்காசியாவுக்கும் பொதுவான இந்த பரந்துபட்ட தலைப்பினை மிக அழகாக Bobby Sanjay திரைக்கதையாக்க அதை திரைப்படமாக கொடுத்திருக்கின்றார் இயக்குனர் Rosshan Andrrews
இந்தப்பட்ம் ஆணணாதிக்க கட்டமைப்புக்குள் சிக்கி தன்னுடைய கனவுகளையும் ஆசைகளையும் மூலையில் போட்டு வைத்திருக்கும் பெண்கள் தங்களுடைய நிலையினை உணரவும் பெண்கள் சாதிப்பதற்கு அவர்களுடைய வயது ஒன்றும் பெருட்டே இல்லை என்பதையும் 140 நிமிடங்களுக்குள் மிக அழகாக காட்டியிருக்கன்றார் இயக்குனர். இதில் நிருபமா கதாபாத்திரத்திற்கு வரும் மஞ்சு வாரியர் தன்னுடைய நடிப்பினால் நிருபமா பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கின்றார். அத்தோடு சமூகத்தில் காணப்படும் மிகப்பெரிய சிக்கலுடைய பெண்கள் அடக்குமுறை மற்றும் ஆணாதிக்க மனோநிலை மற்றும் கட்டமைப்பு பிரச்சனையை மிக எளிதாக இந்தப் படத்தின்மூலம்  காட்டி அவற்றை தகர்த்துக்கொண்டு பெண்கள் சமூக மட்டத்திற்கு எவ்வாறு உயரலாம் என்பதை இந்தப்படம் மிகத்தெளிவாக காட்டியிருக்கின்றது. கட்டாயம் மலையாளம் பேசுவோர் மாத்திரமல்லாது எல்லா மொழி பேசுபவர்களும் பார்க்கவேண்டிய ஒரு மிகச்சிறந்த படம். 


கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...