21 செப்டம்பர் 2008

2009ல் உலகம் அழிவை சந்திக்க போகிறதா????


2009 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் உலகம் மிகப் பெரிய அழிவுகளை சந்திக்க போவதாக பரவலாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. இவற்றிற்கு காரணம் போரிஸ் கிப்ரியானோவிச் என்ற 12 வயது மாத்திரம் நிரம்பிய ரஸ்யாவை சேர்ந்த சிறுவன் கூறும் தகவல்கள் தான்.
இந்தச் சிறுவனை பற்றிய தகவல்களை கேட்கவே புல்லரிக்கின்றது.1996ல் பிறந்த இவன் எல்லோரையும் போலவே அல்லாமல் பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து,நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது? ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம்! இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய
நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும்
கொடுத்திருக்கிறது.திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் –
என்கிறார் போரீஸின் தாய்.தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.
செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி
வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய்
பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில்
பார்த்தவை என்கிறான்.
அவனுடைய மூன்றாவது வயதில் கோள்களை பற்றியும், விண்வெளி பற்றியும் கூறிய தகவல்கள் ஏனையோரை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கும்,அத்தனையும் உண்மையானவையாகவும் இருந்திருக்கின்றன.இதனால் ஆலயத்தில் அவனுக்கு கிறீஸ்தவ முறைப்படி திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர் அவனுடைய பெற்றோர்.ஆனால் அதற்கு பின் அவன் வீதிகளில் இறங்கி அழிவு வரப்போகிறது என எச்சரிக்கை செய்ய தொடங்கி இருக்கிறான்.இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு
அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக
விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு
வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.
உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் "இண்டிகோ" சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர். இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.
இவனை பல விஞ்ஞானிகள் கேள்விகளால் குடைந்த போதும் அவனது அலட்சியமான, உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.(உதாரணத்திற்கு விண்கலத்தின் பாககங்களை குறித்து இவன் கூறும் தகவல்கள் அத்தனையும் உண்மையாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.)ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில்!
நாங்களும் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என தெரியாது முழிக்க வேண்டி இருக்கிறது.மக்களை பொறுத்தவரை எல்லாவற்றிக்கும் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.அதாவது 2009 வரை பொறுத்திருந்து பார்ப்பது தான் அந்த வழி.ஏனென்றால் இதற்கு முன்னும் 2000ம் ஆண்டிலும் உலகம் அழியப் போகிறது என பரவலாக பேசப்பட்டது.
அழிவுகள் என்பது எமக்கு புதுசானவை அல்லவே எனவே பொறுத்திருந்து தான் பார்ப்போமே!!!

ஜனாதிபதி மைத்திரியின் ஈரானிய விஜயம்

                    இலங்கை   ஜனாதிபதி   மைத்ரிபால   சிறிசேன   கடந்த   வாரம்   இரண்டு   நாள்   அரசமுறைப்   பயணமாக ஈரான்   நாட்டுக்கு ...