02 டிசம்பர் 2008

உலக எயிட்ஸ் தினம் (December 1st)இன்றய நவீன உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் ஒரு உயிர்கொல்லி நோய்தான் இந்த எயிட்ஸ். இன்று நவீன மனிதன் எத்தனையோ கண்டுபிடிப்புக்களை செய்தாலும் இந்த உயிர்கொல்லி நோய்க்கான மருந்து ஒன்றைகண்டுபிடிக்கமடியாமல் இருப்பது ஒரு துரதிஸ்ரவசமான சம்பவம்தான். இதை யாராலும் மறுக்க முடியாது. முதலில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளவேண்டும் எயிட்ஸ்(AIDS-Acquired Immune Deficiency Syndrome) என்பது பல நோய்கள் ஒன்றாக சேர்ந்த நிலையே தவிர தனி ஒரு நோய்யல்ல. இது மனிதனின் நிர்ப்பீடண தொகுதியை தாக்கி செயலிழக்க வைத்துவிடும்.

முதலில் இந்த உயிர்கொல்லி நோய் எப்படி உருவாகியது எனப்பார்ததால் ஆபிரிக்காவில் வாழ்ந்த பழங்குடியினருக்கு குரங்கிலிருந்து பரவியதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது ஆபிரிக்காவில் வாழ்ந்த பழங்குடியினர் குரங்குகளின் இரத்தத்தை பருகும் பழக்கம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக குரங்கிலிருக்கக்கூடிய S.I.V(Simion Immunodeficiency Virus) எனும் நோய்க்கிருமி இரத்தத்தின் வழியாக மனிதனின் உடலுக்குள் புகுந்து H.I.V
(Human Immunodeficiency Virus) ஆக தோற்றம் பெற்றதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இந்தக் வைரசுக்கு (Human Immunodeficiency Virus) என்று பெயர்வரக் காரணம் இவை மனிதனில் மட்டுமே உயிர்வாழக்கூடியவை என்றபடியால் ஆகும். HIV கிருமியானது மனித உடலுக்கு வெளியே 2-3 வினாடிகள் மட்டுமே உயிர்வாழக்கூடியது. அது தவிர மனிதனின் கண்ணீரைத் தவிர ஏனைய எல்லா திராவகங்களிலும் இது உயிர்வாழும். இந்த வைரஸ் ஆனது மனிதனில் காணப்படும் ஏனைய வைரஸ்களைவிடவும் மிகவும் வித்தியாசமானது. இவை மனிதனின் உடலிற்குள் தனது உருவத்தை மாற்றி புகுந்தவுடன் மனிதனில் காணப்படும் நோய்யெதிர்ப்பு கலங்களை அல்லது CD4/T4 கலங்களை ஒவ்வொன்றாக அழிக்கும். அதன்பின்னரே தனது வேலையை காட்டத்தொடங்கும். இவ்வாறு நடைபெறுவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும். இதனால் பரிசோதைனைகளால் மாத்திரமன்றி உடனடியாக இதை தெரிந்துகொள்ள முடியாது. கண்டுபிடிக்க பெரும்பாலும் கிட்டத்தட்ட 3 வாரங்கள் தொடக்கம் 3 மாதங்கள் வரையும்கூட ஆகலாம். ஒரு மனிதனுக்குள் HIV கிருமி நுளைந்து AIDS நிலையை அடைய ஏறத்தாள 8-15 வருடங்கள் வரையும் செல்லலாம்.

உலக எயிட்ஸ் தினம்
HIV மனித உடலில் காணப்படும் இடங்கள்

1. குருதி
2. யோனித்திரவகம், விந்துதிரவகம், விந்தணு
3. தாய்ப்பால்
4. எச்சில்
5. சிறுநீர்


மேலேயுள்ளவற்றில் எச்சில், மற்றும் சிறுநீரில் HIV காணப்படும் செறிவு மிகக்குறைவு. உதாரணமாக எச்சில் மூலம் ஒருவருக்ககு HIV பரவவேண்டும் என்றால் ஏறத்தாள 2 கலன்கள் எச்சில் தேவை.


HIV பரவும் முறை

பிரதானமாக மூன்று முறைகளில் HIV மனித உடலுக்குள் பரவுகிறது

1. HIV கிருமியுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு

2. HIV பெற்றோரிடமிருந்து பிள்ளைக்கு

3. HIV கிருமியுள்ள குருதியின்மூலம்இலங்கையில் HIVயானது மேற்கூறிய மூன்று முறைகளிலும் 96%,3%,1% என்றவகையில் பரவுகின்றது.

HIV பரவாமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள்

1. பாலியல் தொடர்பே இல்லாது இருத்தல்/ செய்யாமல் விடுதல்

1. ஒருவனுக்கு ஒருத்தியென்று உண்மையாக இருத்தல்

4. உடலுறவின்போது பாதுகாப்பான வழிமுறைகளை கடைப்பிடித்தல்


இலங்கையில் இதுவரையிலும் பதிவின்படி 1024 பேர் HIV தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மேலும் 5000ம் பேருக்கு தொற்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

உலகைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு சுமார் 15000 பேர் HIV தொற்றுக்குள்ளாகிறார்கள். இதைவிட ; நாளொன்றுக்கு சுமார் 8000 பேர் HIV யால் மரணிக்கிறார்கள்.சுமார் 60மில்லியன் பேர் இதுவரையிலும் HIV யால் பலியாகிவிட்டார்கள்.

1 கருத்து:

Chuttiarun சொன்னது…

hi please read my website in tamil: www.thamizhstudio.com

this website for tamil history and short / documentary film... if you think this is usefull site then please give a link to my site from your blog.

thanks,
arun m.

ஜனாதிபதி மைத்திரியின் ஈரானிய விஜயம்

                    இலங்கை   ஜனாதிபதி   மைத்ரிபால   சிறிசேன   கடந்த   வாரம்   இரண்டு   நாள்   அரசமுறைப்   பயணமாக ஈரான்   நாட்டுக்கு ...