29 டிசம்பர் 2010

காவலன் படத்தினை வெற்றிபெறச்செய்வோம்

தலைப்பை பார்த்தவுடன் விஜய் இரசிகர்கள் மிகுந்த சந்தோசமடைவார்கள் என்று நினைக்கின்றேன் சந்தோசப்பட்டால் மட்டும் போதாது சூட்டோடு சூடாக (எவன்டா அவன் அங்க சூடா என்ன வேணும் என்று கேட்கிறது?) எனக்குரிய சன்மானத்தினை வழங்கவேண்டும் என்று விஜயினுடைய இரசிகர்களைஅன்புடன் கேட்டுக்கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

அண்மைக்காலமாக விஜய் நடித்த படங்கள் எல்லாம் பலத்த சாதனைகளை தோல்வியில் நிலைநாட்டிக்கொண்டிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் தொடர் தோல்விகள் தயாரிப்பாளர்களுக்கு தொடர் நட்டங்கள் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளை விஜய் தனது படங்களின்மூலம் சந்தித்தும் விஜய் திருந்துவதாக இல்லைப்போல்லாதான் தெரிகின்றது.  இந்தா வருகிறது அந்தா வருகிறது பொங்கலுக்கு வருகிறது என்று தியட்டர் இல்லாமல் காவலன் படத்தினுடைய வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. இந்த லட்சணத்தில மன்மதன் அம்பு படம் தோற்கவேணும் அப்போதுதான் காவலன் படம் வெளியிடுவதற்கு தியட்டர் கிடைக்கும் என்று கேனைத்தனமாக புலம்பிக்கொண்டு இருக்கும் விஜய் இரசிகர்களும் இருக்கிறார்கள் என்று இந்த நேரத்தில் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. 

நான் உண்மையிலேயே விஜயினுடைய எதிர்பாளன்தான் ஆனால்பாருங்கோ எனக்கே விஜயினுடைய தோல்விப்படங்களை பார்த்து போரடிச்சுப்போச்சு பின்ன மொக்கை படங்களை தொடர்ந்து தந்தால் தோல்விக்குமேல் தோல்வி வராமல் வெற்றியா வரும் என்று விஜய் எதிர்ப்பாளர்கள் கேட்கிறது தெரிகின்றது (இப்போதெல்லாம் விஜய் இரசிகர்களே விஜயை திட்டுகிறஅளவுக்கு நிலமை ஆகியிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது) அதோட இன்னும் எவ்வளவு நாள்தான் நாங்களும் மொக்கை படங்களையே பார்க்கிறது அதனான இனி வரும் படங்களின் கதைகளையாவது சரியாக தெரிவு செய்யவேண்டும் இதுதான் எனது கோரிக்கை. அதனால மொக்கை படமாக இருந்தாலும் காவலன் படமாவது வெற்றிபெறவேண்டும் என்று என்னுடைய உள்மனம் சொல்லுது ஆகவே மொக்கை படமாக இருந்தாலும் பரவாயில்லை சினிமா இரசிகர்களே காவலன் படத்தை பத்து பதினைந்து தடவையாவது தியட்டருக்கு சென்று பார்த்து படத்தினை வெற்றிபெறச்செய்யவேண்டும் என்று தாழ்மையாக வேட்டுக்கொள்ளுகிறேன். விஜய் காவலனுக்கு பிறகாவது நல்ல கதைகளை தெரிவு செய்து நடிகவேணும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பம்கூட.

அப்புறம் விஜய் அவருடைய அப்பாவோட சேர்ந்து பல சொங்கித்தனமாக செய்யக்கூடாத விடயங்களை செய்வதற்கு தயாராகிறமாதிரி கதையெல்லாம் அடிபடுகிறது அதுதான் அவருடைய அரசியல் மேட்டர். அதற்காக விஜயை அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்லி நான் அவருடைய ஜனநாயக உரிமையை தடுக்க விரும்பவில்லை. அரசியலுக்கு வாங்கோ வந்து மக்களுக்கு நல்லதை செய்யுங்கோ ஆனால் சரியான நேரத்தில அரசியலுக்கு வாங்கோ என்றுதான் நான் கூறுகிறேன்.
விஜய்க்கும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்குது என்று நான் நம்புறன் அதைவைச்சு அவர் நல்ல நேரத்தில நல்ல முடிவொன்றை எடுப்பார் என்று நான் நம்புறன்.

கடைசியிலையும் சொல்லுறன் மொக்கைபடமாக இருந்தாலும் எப்படியாவது காவலன் படத்தினை வெற்றிபெறச் செஞ்சிடுங்கோ இது இந்த விஜய் எதிர்பாளனின் தாழ்மையான வேண்டுகோள் அம்புட்டுத்தான் விசியம்...

47 கருத்துகள்:

நிரூஜா சொன்னது…

சுடுசோறு, சுடுசோறு, சுடுசோறு, சுடுசோறு, சுடுசோறு, சுடுசோறு, சுடுசோறு,

நிரூஜா சொன்னது…

நெருப்பு புகழ் வதீஸ் வாழ்க

SShathiesh-சதீஷ். சொன்னது…

இதுக்கு தான் அண்டையான் ஸ்கைப் கதையை கொப்பி அடிக்க கூடாது என்கிறது. விஜய் ரசிகன் வதீஸ் வாழ்க

வதீஸ்-Vathees சொன்னது…

@ Shathiesh - கொய்யால பின்ன கேனைத்தனமாக கதைச்சால் பின்ன என்ன செய்யுறது.

டேய் நான் எப்படா சொன்னன் விஜய் இரசிகன் என்று பதிவை திரும் ஒருக்கா வாசியடா சதீஷ்

சொடீஷன் ரசிகர் மன்றம் சொன்னது…

யாரப்பாத்து என்ன சொன்னிங்க லண்டன் கொந்தளிக்கும். எங்க தலைவர் சொன்னதுதான் சரி. வதீஸ் ஒலிக

வதீஸ்-Vathees சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வதீஸ்-Vathees சொன்னது…

சொடீஷன் ரசிகர் மன்றத்துக்கெல்லாம் பதிலளளிக்க முடியாது...தமிழை அழகாக எழுத பழகுங்கடா முதலில

Anuthinan S சொன்னது…

தொடர்ந்து பதிவு போடும் வதீஸ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!!!

உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் அண்ணா!!!

சூடா அடுத்த பதிவு என்ன அண்ணா??? #சும்மா

KANA VARO சொன்னது…

ஏலேய்! புரிஞ்சு போச்சுய்யா உங்க திட்டம். காவலன் வெற்றிப் படமா வந்தாலும், இந்த பதிவில சொன்னது போல ஒவ்வொருவரும் பத்து பதினைஞ்சு தரம் பார்த்து தானே வெற்றி பெற்றது எண்டு சொல்லப் போறிங்க...

வதீஸ்-Vathees சொன்னது…

@Anuthinan - :D
இனி புதுசு புதுசா அடிக்கடி பதிவு வரும்
சூடா எதுவும் இல்லை ஆறின பதிவுதான் இருக்கு புதுவருடம் கழித்து வாசித்து கொள்ளுங்கோ

@Varo
ஃஃஏலேய்! புரிஞ்சு போச்சுய்யா உங்க திட்டம். காவலன் வெற்றிப் படமா வந்தாலும், இந்த பதிவில சொன்னது போல ஒவ்வொருவரும் பத்து பதினைஞ்சு தரம் பார்த்து தானே வெற்றி பெற்றது எண்டு சொல்லப் போறிங்க..ஃஃ

இன்னுமா நம்புறீங்க...

மைந்தன் சிவா சொன்னது…

இந்த நக்கலுகளுக்கெல்லாம் எங்க இங்கிலாந்து விஜய் ரசிகர் மன்ற தலைவர் சதீஷ்'ம்,அடி மட்டத் தொண்டன் நானும் பொங்கலுக்கு பதிலளிக்கிறோம்!!

வதீஸ்-Vathees சொன்னது…

ஃஃமைந்தன் சிவா கூறியது...
இந்த நக்கலுகளுக்கெல்லாம் எங்க இங்கிலாந்து விஜய் ரசிகர் மன்ற தலைவர் சதீஷ்'ம்,அடி மட்டத் தொண்டன் நானும் பொங்கலுக்கு பதிலளிக்கிறோம்!!ஃஃ

முதலில பொங்கலுக்காவது படம் வெளியாகுதா என்று பார்ப்போம்

அதிகாலை 2 மணிக்கு அந்தக் கடையில் இருந்தவன் சொன்னது…

வதீசு, என்னப்பா சூடாக் கிடக்குது...

கன்கொன் || Kangon சொன்னது…

அண்ணே என்னண்ணே பதிவெல்லாம் போட்டுக் கலக்குறியள்?
பிரமாதம்...

கன்கொன் || Kangon சொன்னது…

:-)))

வதீஸ்-Vathees சொன்னது…

ஃஃகன்கொன் || Kangon கூறியது...
அண்ணே என்னண்ணே பதிவெல்லாம் போட்டுக் கலக்குறியள்?
பிரமாதம்...ஃஃ

ஏதோ செய்யக்கூடாத ஒன்றை செய்தமாதிரியெல்லோ உங்கட கதை இருக்கிறது

கன்கொன் || Kangon சொன்னது…

என்னது விஜய் பற்றின பதிவா?
அதுவும் மொக்கை போடாம ஒர பதிவா?

என்னே அதிசயம்...

கன்கொன் || Kangon சொன்னது…

அய்யய்யய்யய்யோ....

ஏன்னே இப்பிடி?

சூடா ஏதும் வாங்கிச் சாப்பிடுங்கோ முதல்ல..

கன்கொன் || Kangon சொன்னது…

எனக்கு மட்டும் இரகசியமாச் சொல்லுங்கோ, நீங்கள் விஜய் இரசிகன் தானே?

வதீஸ்-Vathees சொன்னது…

ஃஃகன்கொன் || Kangon கூறியது...
எனக்கு மட்டும் இரகசியமாச் சொல்லுங்கோ, நீங்கள் விஜய் இரசிகன் தானே?ஃஃ

கொய்யால...பதிவை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும்

கன்கொன் || Kangon சொன்னது…

// கொய்யால...பதிவை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும் //

இந்தப் பதிவ ஒருக்கா வாசிச்சதே பெரிய விசயம். :P

வதீஸ்-Vathees சொன்னது…

ஏன் எல்லோரும் விஜய் என்றதும் மொக்கைப்பதிவுதான் போடவேணும் என்று நினைக்கிறீர்கள் விஜயை வைத்து மொக்கைபதிவு போடுற கலாச்சாரம் போரடிச்சிட்டுது அதுதான் புதிய முயற்சி... என்ன இருந்தாலும் பாவமய்யா அவரு...

கன்கொன் || Kangon சொன்னது…

// விஜயை வைத்து மொக்கைபதிவு போடுற கலாச்சாரம் போரடிச்சிட்டுது அதுதான் புதிய முயற்சி... என்ன இருந்தாலும் பாவமய்யா அவரு... //

அப்ப இது மொக்கையில்லயா?
சீரியஸ் பதிவா?
சமூக மாற்றத்திற்கான பதிவா?

வதீஸ்-Vathees சொன்னது…

கங்கோன் இதை சமூக மாற்றத்திற்கான பதிவு என்று யார் சொன்னது இது விஜயினுடைய மாற்றத்திற்கான பதிவுஒரு அவ்வளவுதான் வித்தியாசத்திற்கு இருக்கட்டுமே என்று எழுதியது..

கன்கொன் || Kangon சொன்னது…

// இது விஜயினுடைய மாற்றத்திற்கான பதிவு //

அப்ப உங்கட பதிவ விஜய் வாசிக்கிறார் எண்டு சொல்லுறீங்களோ?

வதீஸ்-Vathees சொன்னது…

அவ்வ்வ்...இதுக்கு நான் என்னபதிலை சொல்லுறதென்று தெரியலை

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

விஜய் முதல்வர் ஆனால், வதீஸ்தான் கொ.ப.செ என கதை அடிபடுதே.

உண்மையா வதீஸ்

வதீஸ்-Vathees சொன்னது…

ஃஃஃயோ வொய்ஸ் (யோகா) கூறியது...
விஜய் முதல்வர் ஆனால், வதீஸ்தான் கொ.ப.செ என கதை அடிபடுதே.

உண்மையா வதீஸ்ஃஃஃ

எனக்கு விளங்கவில்லை...

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

கொள்கை பரப்பு செயலாளர்

வதீஸ்-Vathees சொன்னது…

கொள்ளையே இல்லைபோல இருக்கு இதுல பொ.ப.செ வேற...எல்லாம் என் நேரம்தான் அவ்வ்வ்வ்

ஃபயாஸ் கடை ஊழியன் சொன்னது…

ங்கொய்யாள, இனிமே நீ எங்கயாவது போய் சூடா எதாவது கேப்பா? பிச்சுபுடுவன் பிச்சு

Jana சொன்னது…

:)

“நிலவின்” ஜனகன் சொன்னது…

அண்ணே.....விஜய் படம் மட்டுமா தோற்கிறது....ஏன் அஜித்,ரஜனி,சூர்யா,விக்ரம்,சிம்பு படங்கள் இது வரைக்கும் தோற்கலையா......????

விஜய் உங்களுக்கெல்லாம் தனிப்பட்ட எதிரியா....???

ஏன் வீணாக திரை நட்சத்திரங்களை கலாய்க்கின்றீர்கள்.....
எல்லா நேரமும் ரசனைகள் ஒன்றாக இருக்காது....
அப்படி இருந்திருந்தால் சுப்பிரமணிய புரம் எல்லாம் வெற்றி பெற்றிருக்காது.......!!!

வதீஸ்-Vathees சொன்னது…

//ஃபயாஸ் கடை ஊழியன் கூறியது...
ங்கொய்யாள, இனிமே நீ எங்கயாவது போய் சூடா எதாவது கேப்பா? பிச்சுபுடுவன் பிச்சு//

அடியே நிருஜா ஓஓஓ..சாரி மாலவன் அண்ணே இது உங்களுக்கே ஓவராக தெரியலை சொந்த பெயுரிலை வந்து பின்னூட்டம் போடுங்கோ

ஜனா அண்ணா நன்றி

வதீஸ்-Vathees சொன்னது…

ஃஃஃ“நிலவின்” ஜனகன் சொன்னது…
அண்ணே.....விஜய் படம் மட்டுமா தோற்கிறது....ஏன் அஜித்,ரஜனி,சூர்யா,விக்ரம்,சிம்பு படங்கள் இது வரைக்கும் தோற்கலையா......????

விஜய் உங்களுக்கெல்லாம் தனிப்பட்ட எதிரியா....???

ஏன் வீணாக திரை நட்சத்திரங்களை கலாய்க்கின்றீர்கள்.....
எல்லா நேரமும் ரசனைகள் ஒன்றாக இருக்காது....
அப்படி இருந்திருந்தால் சுப்பிரமணிய புரம் எல்லாம் வெற்றி பெற்றிருக்காது.......!!!ஃஃஃ


விஜயின் மீது தனிப்பட்ட கோபமெல்லாம் இல்லை விஜய் தற்போதெல்லாம் நல்ல கதையினை தெரிவு செய்து நடிப்பதில்லை அதனால்தான் இப்படி போட்டுத்தாக்குகிறோம்...

சுப்பிரமணியபுரம் படத்தினுடைய கதை அந்தப்படத்தை வெற்றிபெறவைத்தது ஆனாலும் நீங்க மனசை தொட்டு சொல்லுங்க விஜயின்மீது உங்களுக்கு கோபம் வரலையா விஜய் மொக்கை படங்களாகவே தொடர்ந்தும் நடித்துக்கொண்டிருக்கிறார்

“நிலவின்” ஜனகன் சொன்னது…

நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் நல்ல படங்களை ரசிப்பவன் என்பதால் தங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன்....
(சுறா படத்தின் முதல் காட்சிக்கு சென்ற நான் இடைவேளையுடன் வந்த சோகமும் எனக்குண்டு.....)

இருந்தாலும் தனியே ஒருவரை மட்டும் தாக்குவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்....ஏனெனில் பதிவுலகு பக்கசார்பாக இருக்க கூடாது என்னது என் எண்ணம்.....

சரி அண்மையில் வந்த ரத்த சரித்திரம்,மன்மதன் அம்பு(எனக்கு நன்று) பற்றி என்ன சொல்லுகின்றீர்கள்.....??

வதீஸ்-Vathees சொன்னது…

மன்மதன் அம்பு பற்றி ஏற்கனவே சொல்லியாச்சே நீங்க இன்னும் பார்க்கலையோ ஜனகன்

“நிலவின்” ஜனகன் சொன்னது…

அட ஆமா......நன்று அண்ணா....அடுத்தது...?

kippoo சொன்னது…

வியையின் இரசிகர்கள் நல்ல சன்மானம் வழங்க காத்து இருக்கின்றார்கள் உங்களுக்கு.
இதிலும் விஜய் தோல்வியை தழுவினால் சினிமாவை விட்டு விலகலாம் என்பது எனது கருத்து .

வதீஸ்-Vathees சொன்னது…

@ Kippoo - same blood

சொடீஷன் இறசீகர் மண்டம் சொன்னது…

விஜய் வால்க.

நிரூஜா சொன்னது…

//விஜய் வால்க.

எவண்டா அவன் விஜய்க்கு வால் பிடிக்கிறது

சொடீஷன் இறசீகர் மண்டம் சொன்னது…

நிரூஜா ஒலிக.

சொடீஷன் இறசீகர் மண்டம் சொன்னது…

எங்ஹ பதிளக் காணேம்?

நிரூஜா இரசிகர் மன்றம் சொன்னது…

நிரூஜா வாழ்க.

Ahamed Suhail சொன்னது…

என்ன பாஸ் சொல்றீங்க மொக்கைப் படத்தை வெற்றி பெறச்செய்துட்டா..

திரும்பவும் அதே ஸ்ட்டைல்ல கிளம்பிடுவாரே தல-பதி அதுக்கு என்ன பண்றதாம்

நெத்தலி - சுறா பார்ட்-2 (ரிப்பீட்டு...)
http://aiasuhail.blogspot.com/2010/12/2.html

Bavan சொன்னது…

பழைய சோறு எனக்குத்தான்..:P

//எனக்கே விஜயினுடைய தோல்விப்படங்களை பார்த்து போரடிச்சுப்போச்சு//

ஹாஹா எனக்கும் எனக்கும்..:D

//மொக்கைபடமாக இருந்தாலும் எப்படியாவது காவலன் படத்தினை வெற்றிபெறச் செஞ்சிடுங்கோ இது இந்த விஜய் எதிர்பாளனின் தாழ்மையான வேண்டுகோள் //

அவ்வ்வ்வ்வ்வ்வ்..

ஜனாதிபதி மைத்திரியின் ஈரானிய விஜயம்

                    இலங்கை   ஜனாதிபதி   மைத்ரிபால   சிறிசேன   கடந்த   வாரம்   இரண்டு   நாள்   அரசமுறைப்   பயணமாக ஈரான்   நாட்டுக்கு ...